வேட்டையாட சென்ற இருவர் பிடிபட்டனர்

வேட்டையாட சென்ற இருவர் பிடிபட்டனர்
X

சேலம் ஜருகுமலை காப்புக்காடு பகுதிகளில் தெற்கு வனசரக அலுவலர் தலைமையில் வனவர், வனக் காப்பாளர்கள் அடங்கிய குழுவினர் இரவு ரோந்து பணியில் போது இருசக்கர வாகனத்தை காப்புக் காட்டில் மறைத்து வைத்துவிட்டு, காட்டு முயலை ஏர்கன் துப்பாக்கியினை பயன்படுத்தி வேட்டையாட முயன்ற இரண்டு நபர்களை சுற்றி வளைத்து கையும் களவுமாக வனத்துறையினர் பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் மணிகண்டன், ரமேஷ் இருவரும் பனமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் இருவர் மீது சேர்வராயன் தெற்கு வனசரக வன உயிரின குற்றத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி இரண்டு நபர்களுக்கு தலா பத்தாயிரம் வீதம், 20 ஆயிரம் இணக்க கட்டணம் விதித்து குற்றவாளிகளை விடுவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!