சேலத்தில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்

சேலத்தில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்
X

இந்திய கம்யூனிஸ்ட் சார்பில்,  சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தி, நூதன முறையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சேலத்தில், கேஸ் விலை உயர்வை கண்டித்து சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து, இறுதி மரியாதை செய்து, நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சிலிண்டர் விலை 25 ரூபாய் கூடுதலாக உயர்ந்து, 850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சிலிண்டர் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி,பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில், பாரத ஸ்டேட் வங்கியின் முன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன் தலைமையில், சிலிண்டர் உயர்வை கண்டித்து, இன்று நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து, இறுதி மரியாதை செய்து, நூதன முறையில் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் சிலிண்டர் விலையை அரசு உடனே குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி