ஸ்டாலின் ஓட்டுக்காக பொய் பேசுகிறார்-வி.பி.துரைசாமி

ஸ்டாலின் ஓட்டுக்காக பொய் பேசுகிறார்-வி.பி.துரைசாமி
X

எம்ஜிஆர் பிறந்தநாளன்று அவரது நினைவிடத்திற்கு சென்று திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செய்யாதது ஏன் என பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி கேள்வி எழுப்பினார்.

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி தலைமையில் பாஜக நிர்வாகிகளுடனான பட்ஜெட் விளக்க கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விபி துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சசிகலாவை அதிமுகவில் இணைத்துக் கொள்வதும், இணைக்காததும் முழுக்க முழுக்க அதிமுகவின் உள்கட்சி விவகாரம். இது குறித்து கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. தமிழகத்தில் 2026 ம் ஆண்டு பாஜக தலைமையிலான முதல்வர் அமையும் என்று அண்ணாமலை கூறியதை வழிமொழிகிறேன் என்றார்.

பாஜக பிரமுகர் கல்யாணராமன் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசியதால் அதை வரவேற்கும் இடத்தில் பாஜக இருக்காது. அதேபோல் இஸ்லாமியர்கள் இந்துக்களின் மனம் புண்படும்படி பேசினால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். மேலும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மனுக்களைப் பெறும் திமுக தலைவர் ஸ்டாலின், தான் எம்ஜிஆர் ரசிகர் என்று கூறிக்கொண்டு எம்ஜிஆர் பாடல் பாடுகிறார். ஆனால் எம்ஜிஆர் பிறந்தநாளன்று அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செய்யாதது ஏன் ?. அவர் ஓட்டுக்காக பொய் பேசுகிறார் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!