சேலத்தில் தடுப்பூசி மையங்கள் அதிகரிப்பு... கலெக்டர் நடவடிக்கை
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம்
கொரோனா பரவலை தடுக்க, 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் , சேலம் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மையங்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 16 மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அனைத்து மையங்களிலும் மக்களின் கூட்டம் அதிகளவில் உள்ளது. இதை தவிர்க்கும் வகையில் மாநகரப்பகுதிகளில் கூடுதலாக 14 மையங்கள் அமைத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், இரண்டு வார்டுகளுக்கு ஒரு மையம் வீதம் மொத்தம் 30 மையங்களிலும், ஊரகப்பகுதியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 91 ஆரம்ப சுகாதார மையங்களிலும் என 121 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்து தடுப்பூசி மையங்களிலும் அன்றைய தினம் போடப்படும் தடுப்பூசி எண்ணிக்கை விபரங்களை அறிவிப்பு பலகைகள் மூலம் பொது மக்களுக்கு தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் , எந்தெந்த பகுதியில் எந்தெந்த நாட்களில் தடுப்பூசி போடப்படுகிறது என்ற விபரத்தினை தினமும் பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.
தடுப்பூசி காலை 09.00 மணி முதல், மாலை 04.00 மணி வரை போடப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு அவரவர் வசிக்கும் இடங்களுக்கு நேரில் வந்து தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் தடுப்பூசி இனிமேல் கிடைக்காது என்ற யாரும் கருத வேண்டியதில்லை என, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu