மேட்டூர் அணையின் நீர்மட்டம் 42.63 அடியாக சரிவு
மேட்டூர் அணை.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன்.16) இன்று காலை 8 மணி நிலவரப்படி 42.87 அடியிலிருந்து 42.63 அடியாக சரிந்தது.
சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணையின் மொத்த நீர்த்தேக்க அளவு 120 அடி ஆகும். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நேற்று (ஜூன்.15) சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 149 கன அடியாக இருந்த நிலையில், இன்று (ஜூன்.16) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 114 கன அடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தைக் காட்டிலும் நீர் திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 42.87 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 42.63 அடியானது. நீர் இருப்பு 13.48 டிஎம்சியாக இருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu