சேலம் மாநகராட்சியில் நாளை 49 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள்

சேலம் மாநகராட்சியில் நாளை 49 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள்
X

மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் நாளை 49 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சியில் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களை வீடுவீடாகச் சென்று கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் இன்று மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 49 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

அடுத்ததாக, மாநகராட்சிப் பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை ஜாகீர் அம்மாப்பாளையம் சாஸ்திரி நகர், ஆசாத் நகர், போடிநாயக்கன் பட்டி, பஜனை மடம் தெரு, தென் அழகாபுரம், கௌரிபுரம், சிறைச்சாலை பின்புறம், தொட்டு சந்திராயர் தெரு, புது காலனி, முகமது புறா, பாலாஜி நகர், ஆறுமுக நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், பிற்பகல் 11.00 முதல் 1.00 மணி வரை ரெட்டியூர் டவுன் பிளானிங் நகர், அரியாகவுண்டம்பட்டி எம்.கே. நகர், குடுமியான் தெரு, பள்ளப்பட்டி சுந்தரம் காலனி, அருண் நகர், டி.வி.எஸ் காலனி, சேகர் தெரு,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.

மேலும், நண்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை காமநாயக்கன் பட்டி, கந்தம்பட்டி காலனி, அம்மாசி நகர், நரசிம்மன் ரோடு, அண்ணா நகர், போயர் தெரு, பிள்ளையார் நகர், நாகம்மாள் தோட்டம், அண்ணா நகர், ராஜ கோபால் லே அவுட், கீழ் மேட்டுத் தெரு, வ.உ.சி நகர், ,உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என நாளை 49 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களை, முகாம் நடைபெறும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!