/* */

சேலம் மின்பகிர்மான வட்டத்தில் பராமரிப்பு பணிகள் தீவிரம்

சேலம் மின்பகிர்மான வட்டத்தில், மின் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

சேலம் மின்பகிர்மான வட்டத்தில் பராமரிப்பு பணிகள் தீவிரம்
X

சேலத்தில், டிரான்பார்மர் ஒன்றில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மின்வாரிய ஊழியர்கள்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த 10 மாதங்களாக மின்பராமரிப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, 10 நாட்களுக்குள் தமிழகம் முழுவதும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சேலம் மாநகர் முழுவதும் மின் பராமரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், புதிய மின்கம்பிகள் மாற்றம் செய்யும் பணி, மின்கம்பங்களில் பீங்கான் இன்சுலேட்டருக்கு பதிலாக, மின்தடை ஏற்படாத வண்ணம் நவீன பைபர் பொருளால் உருவாக்கப்பட்ட இன்ஸ்லெட்டர் மாற்றப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறு கோட்டங்களில் சுமார் 953 இடங்களில் இந்த மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பணியினை மின்சார வாரியம் கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த பணிகள் விரைந்து செய்து, வரும் 28-ஆம் தேதிக்குள் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மெயின் பராமரிப்பு பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 25 Jun 2021 7:44 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  3. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  4. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  5. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  6. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  7. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  10. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..