காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தீ குளிக்க முயன்ற பெண்

காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி  தீ குளிக்க முயன்ற பெண்
X

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு தீ குளிக்க முயன்ற பெனிஷா. 

காதலித்து ஏமாற்றிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பட்டதாரி பெண்.

சேலம் ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண் பெனிஷா.இவர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திடீரென மண்ணைண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக இளம்பெண் பெனிஷாவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரின் பிடியிலிருந்து ஆவேசமாக பெனிஷா தப்பிச்செல்ல முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பட்டதாரி பெண் பெனிஷா தன்னை ஜெயசூர்யா என்பவர் காதலித்து ஏமாற்றி விட்டு திருமணம் செய்ய மறுப்பதாகவும், எனவே ஜெயசூர்யா மீது நடவடிக்கை எடுத்து தனக்கு நீதி வழங்க வேண்டும் என்று கண்ணீர் விட்டு கதறினார். இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
நாமக்கல் துளிர் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!