ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் நாளை இயங்காது

ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் நாளை இயங்காது
X
முழு ஊரடங்கு காரணமாக ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் நாளை இயங்காது: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊடரங்கு என அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் நாளை 25 ம் தேதி இயங்காது. அதனால் டிக்கெட் முன்பதிவு செய்யவோ, ரத்து செய்யவோ முன்பதிவு மையங்களுக்கு பயணிகள் வர வேண்டாம்.

அதே நேரத்தில் முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள கவுண்டர்களில் உடனடி டிக்கெட் புக்கிங் செய்யப்படும். சேலம் ரயில்வே கோட்டத்தில், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ரயில்வே ஸ்டேஷன் கவுண்டர்களில் உடனடி டிக்கெட் புக்கிங் செய்து, பயணிகள் பயணிக்கலாம். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்