/* */

சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும் இடங்கள்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் வருமாறு:

HIGHLIGHTS

சேலம் மாநகராட்சியில் இன்று  காய்ச்சல் கண்டறியும்  முகாம்கள் நடைபெறும் இடங்கள்
X

சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ்

சேலம் மாநகராட்சியில் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களை வீடு வீடாகச் சென்று கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கும் வகையில், காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ரெட்டிப்பட்டி, அண்ணாபுரம், சொட்டையன் தெரு, துரைசாமி நகர், வாட்டர் போர்டு காலனி, சின்ன கொல்லப்பட்டி, லட்சுமி சுந்தர் நகர், தேவங்கா பிள்ளையார் கோவில் தெரு, சக்தி நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.

இன்று பகல் 12.00 முதல் 2.00 மணி வரை பெருமாள் மலை அடிவாரம், தர்ம நகர், மொரம்புகாடு, ரத்தினம் தெரு, கே.எம்.எஸ்.கார்டன், ஆத்துகாடு, மரவனேரி, மாணிக்கம் தெரு, தில்லை நகர், நாராயண நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.

இன்று பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஜாகீர் அம்மாப்பாளையம் எட்டிக்குட்டை தெரு, கபிலர் தெரு, போடிநாயக்கன்பட்டி, முல்லாக்காடு, மல்லயன்காடு, ஜான்சன்பேட் கிழக்கு, கோவிந்த கவுண்டர் தோட்டம், ஜலால்கான் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என 48 இடங்களில் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On: 5 July 2021 1:43 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  5. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  6. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  7. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  8. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  10. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்