சேலத்தில் முகக்கவசம் அணிய சொன்ன மாற்றுத்திறனாளிக்கு அடிஉதை
சேலம் மாநகராட்சி பகுதிகளில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. இதனை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சேலம் ஏ வி ஆர் ரவுண்டானா அருகே மாற்றுத்திறனாளி ஒருவர் தனது மனைவியுடன், சமூக ஆர்வலர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு விட்டு அங்கேயே காலம் கழித்து வருகிறார். ஏவிஆர் ரவுண்டானா அருகே குடிபோதையில் இருந்த வாலிபர்கள் இருவர் மாற்றுத்திறனாளியை ஏதோ வம்புக்கு இழுத்ததாக கூறப்படுகிறது. அப்போது மாற்றுத் திறனாளி அவர்களிடம் முகக்கவசம் அணிந்து பேசுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த குடிபோதை வாலிபர்கள் மாற்றுத்திறனாளியை அடித்து உதைத்துள்ளனர். இதனைப் பார்த்த சாலையில் சென்றவர்கள் உடனடியாக சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதன் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இரண்டு வாலிபர்களையும் பிடித்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். குடிபோதையில் இருவரும் இந்த செயலில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது முகக் கவசம் அணியுங்கள் என்று நல்ல அறிவுரை சொன்ன மாற்றுத்திறனாளிக்கு அடி உதை பரிசாகக் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu