சேலம் ஆவின் பாலகங்கள், பால் பண்ணையில் அதிகாலை நேரத்தில் அமைச்சர் நாசர் ஆய்வு
சேலம் கொல்லப்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஆவின் பால் பண்ணையில், தினசரி ஐந்து லட்சத்து 25 ஆயிரம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து, 2 லட்சத்து 48 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. தினசரி நாமக்கல் மாவட்டத்திற்கு பால் பாக்கெட்டாக 62 ஆயிரம் லிட்டரும், சென்னைக்கு டேங்கர் லாரி மூலமாக 2 லட்சம் லிட்டரும் அனுப்பப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை முதலே சேலம் மாநகரில், பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக சேலம் அஸ்தம்பட்டி, புதுய பேருந்து நிலையம், 5 ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆவின் பாலகங்களின் பொருட்கள் தரம் மற்றும் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதை தொடர்ந்து சாலையோரங்களில் இருந்த ஆதரவற்ற முதியோர்களுக்கு ஆவின் உணவு பொருட்களை அமைச்சர் வழங்கினார்.
பின்னர், தொடர்ந்து பால் பண்ணையில் உற்பத்தி பிரிவு எவ்வாறு செயல்பட்டு வருகிறது, ஊழியர்கள் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுகிறார்களா? என்று அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். பால்பண்ணையில் உள்ள பால் சுத்திகரிப்பு பிரிவு, பால் பதப்படுத்தும் பிரிவு, வெண்ணை தயாரிப்பு பிரிவு, பால் பவுடர் தயாரிப்பு உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவுகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu