அதிமுக எம்எல்ஏகள் கைது: திமுக அரசை கண்டித்து சேலம் மாநகர அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

அதிமுக எம்எல்ஏகள் கைது:  திமுக அரசை கண்டித்து சேலம் மாநகர அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
X

திமுக அரசை கண்டித்து சேலம் மாநகர அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்த திமுக அரசை கண்டித்து சேலம் மாநகர அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான சட்டமுன்வடிவை எதிர்த்து சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அதிமுக சட்மன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். திமுக அரசின் இந்த அராஜக போக்கை கண்டித்து சேலத்தில் மாநகர அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில், சேலம் மத்திய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்தத் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை, மாநகர அவை தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சக்திவேல், எம்கே செல்வராஜ், ரவிச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று திமுகவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை கூறும்போது, நிதி பற்றாக்குறையால் தள்ளாடிக்கொண்டிருக்கும் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கும் செயல் திமுகவின் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது என்றார். மேலும், ஜெயலலிதாவின் பெயரை இருட்டடிப்பு செய்வதற்காகவே திமுக இந்த செயலை செய்துள்ளது என்று குற்றம் சாட்டியதுடன், இந்த சட்டமுன்வடிவை திமுக திரும்ப பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!