சேலத்தில் இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கத் தடை

சேலத்தில் இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கத் தடை
X
சேலத்தில் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சேலம் ஐந்துரோடு பகுதியில் இயங்கும் குறிஞ்சி மருத்துவமனை மற்றும் டால்மியா போர்டு பகுதியில் உள்ள மணிபால் மருத்துவமனை இனி கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.

இந்த மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாகுறை எனக் கூறி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை திடீரென வேறு மருத்துவமனைக்கு செல்ல உறவினர்களிடம் கூறுவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில் ஆக்ஸிஜன் அளவை முறையாக கையாளவில்லை என்பதும், கொரோனா விதிமுறைக்கு எதிராக செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த இரண்டு மருத்துவமனைகளும் இனி கொரோனா சிகிச்சை அளிக்க தடைவிதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை குணமடையும் வரை வெளியேற்றக் கூடாது என்றும் புதிதாக கொரோனா நோயாளிகளை அனுமதிக்கக்கூடாது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai future project