/* */

கலப்பட மருத்துவ முறையை கண்டித்து உண்ணாவிரதம்

கலப்பட மருத்துவ முறையை கண்டித்து உண்ணாவிரதம்
X

கலப்பட மருத்துவ முறையை கண்டித்து இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.

சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவம் படித்தவர்கள் அனைவரும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு வகையான சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு செய்தது. இந்த அறிவிப்புக்கு ஆங்கில மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த அறிவிப்பை கண்டித்து பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் அடிப்படையில் இந்திய மருத்துவ சங்க சேலம் கிளையின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் இந்திய மருத்துவ சங்க வளாகத்தில் வைத்து நடைபெற்றது. சங்க தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை முன் வைத்து கோஷங்களை எழுப்பினர்.

கலப்படம் மருத்துவ முறையால் எதிர்காலத்தில் மருத்துவத்துறை கேலிக் கூத்தாகும் நிலைக்கு தள்ளப்படும் என்றும் அறுவை சிகிச்சைக்காக சிறப்பான முறையில் பயிற்சி பெற்ற ஆங்கில மருத்துவத்தில் கலப்படம் மருத்துவ முறை கொண்டு வந்தால் எதிர்காலத்தில் மனித சமுதாயத்திற்கு ஆபத்தான சூழ்நிலை விளைவிக்கும் நிலை ஏற்படும் என்றும் எனவே மத்திய அரசு இதை உணர்ந்து கலப்பட மருத்துவமுறை திட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Updated On: 9 Feb 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்