சேலத்தில் வானதி சீனிவாசன் மகன் கார் கவிழ்ந்து விபத்து: உயிருடன் மீட்ட போலீசார்

சேலத்தில் வானதி சீனிவாசன் மகன் கார் கவிழ்ந்து விபத்து: உயிருடன் மீட்ட போலீசார்
X

மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளான கார்.

சேலத்தில் வானதி சீனிவாசன் மகனின் கார் மேம்பால தடுப்பு சுவர் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மகன் ஆதர்ஸ்(22) நேற்று நள்ளிரவு கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு கார் மூலமாக சென்று கொண்டிருந்தாா்.

அப்போது கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள பட்டர்பிளை மேம்பாலத்தின் வழியாக அதிவேகமாக வந்துபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது. இதனால் கார் தலைகீழாக கவிழ்ந்து, சிறிது தூரத்துக்கு இழுத்துச் சென்றதால் கார் கடும் சேதமடைந்தது.

இதனையடுத்து அன்னதானப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆதர்சை மீட்டனர்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி அவர் உயிர் தப்பினார். பின்னர் விபத்துக்குள்ளாகிய காரை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது தகவலறிந்து வந்த பாஜக நிர்வாகிகள் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரின் மகன் ஆதர்சை மற்றொரு காரில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
ai marketing future