மயானங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முக கவசங்களை வழங்கிய சமூக ஆர்வலர்கள்..!

மயானங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முக கவசங்களை வழங்கிய சமூக ஆர்வலர்கள்..!
X
கொரோனா பேரிடர் காலத்தில் மயானங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்பிலான முக கவசங்களை சேலத்தில் சமூக ஆர்வலர்கள் வழங்கினர்.

கொரோனா பேரிடர் காலத்தில் மயானங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்பிலான முக கவசங்களை சேலத்தில் சமூக ஆர்வலர்கள் வழங்கினர்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா உட்பட பல்வேறு வகையில் உயிரிழப்பவர்களின் சடலங்களை எரிப்பதற்கும், புதைப்பதற்கும் மயானங்களில் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். முன் களப்பணியாளர்களான இவர்களுக்கு நோய்தொற்று பரவலை தடுக்கும் விதமாக, சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தெய்வ லிங்கம், சரவணன், மணிகண்டன் ஆகியோர் நவீன ரக முக கவசங்களை வழங்கினர்.

சேலம் காக்காயன் மயானம், சீலநாயக்கன்பட்டி, செவ்வாய்பேட்டை, கன்னங்குறிச்சி ஆகிய மின் தகன மயானங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 100 பேருக்கு தலா 1,300 ரூபாய் மதிப்புள்ள முக கவசங்களை இலவசமாக வழங்குவதோடு, சடலங்களை எரிக்கும் பணியில் ஈடுபடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை ஊழியர்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil