மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் மாலை 6 மணிக்கு கடைகள் அடைப்பு

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் மாலை 6 மணிக்கு கடைகள் அடைப்பு
X

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அடைக்கப்பட்டுள்ள கடைகள்.

சேலத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் செயல்படும் கடைகள் மாலை 6 மணிக்கு அடைக்கப்பட்டது.

கொரோனா பரவலை முற்றிலும் கட்டுப்படுத்தும் நோக்கில் சேலத்தில் வரும் 23ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி இன்றைய தினம் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததையடுத்து சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செவ்வாய்ப்பேட்டை, கடைவீதி, அக்ரஹாரம் உள்பட அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் நகை கடைகள், ஜவுளிக்கடைகள், மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், பழம் & பூக்கடைகள், மற்றும் டாஸ்மாக் கடைகள், வணிக நிறுவனங்கள் சரியாக மாலை 6 மணிக்கு மூடப்பட்டது. தடையை மீறி செயல்பட்ட வணிக நிறுவனங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு