சேலம்: கள்ளத்துப்பாக்கிகளை ஜூலை 19-க்குள் ஒப்படைக்க எஸ்.பி. உத்தரவு
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்ட அளவில் 58 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றின் மீது உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட மனுதாரருக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உரிமம் பெறாத அல்லது உரிமத்தை புதுப்பிக்காமல் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் வரும் திங்கட்கிழமைக்குள் காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு ஒப்படைப்பவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாது. கள்ளத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள், பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்க சேலம் மாவட்ட அளவில் 250 இடங்களில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள், குழந்தை திருமணங்களை தடுக்க சைல்டு லைன் அமைப்போடு இணைந்து மாவட்டம் முழுவதும் பரவலாக நாள்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
குற்ற சம்பவங்களை தடுக்க 665 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மதுபான விற்பனை, கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu