தொகுதி மக்களுக்கு ரொட்டி, முகக்கவசம், கபசுரக்குடிநீர் வழங்கிய சேலம் எம்.பி!

தொகுதி மக்களுக்கு ரொட்டி, முகக்கவசம், கபசுரக்குடிநீர் வழங்கிய சேலம் எம்.பி!
X

சேலம் தெற்கு தொகுதி மக்களுக்கு, சேலம் எம்.பி. பார்த்திபன் ரொட்டி,கபசுரக் குடிநீர், முகக்கவசம் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

சேலம் தெற்கு தொகுதி மக்களுக்கு 5000 ரொட்டிகள், கபசுரக் குடிநீர், முகக்கவசம் உள்ளிட்டவற்றை சேலம் எம்பி பார்த்திபன் வழங்கினார்.

கொரோனோ ஊரடங்கு காரணாமாக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத்தொகுதிகளில் கடந்த 13 நாட்களாக, பொதுமக்களுக்கு தொடர்ந்து கபசுரக்குடிநீர், முகக்கவசம், உணவு பொட்டலங்கள், ரொட்டிகள் ஆகியவற்றை பிரச்சார வாகனத்தின் மூலமாக வழங்கி வருகிறார்.

அவ்வகையில் இன்று, 14 -வது நாளாக சேலம் தெற்கு தொகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வழங்குவதற்கு 5000 ரொட்டிகள், கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசம் உள்ளிட்டவற்றை, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் அனுப்பி வைத்தார். பொதுமக்களுக்கு அவரே நேரடியாகவும் வழங்கினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!