சேலம் மாநகராட்சியில் இன்று 48 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம்

சேலம் மாநகராட்சியில் இன்று 48   இடங்களில் காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம்
X

மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில், இன்று 48 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சியில் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களை வீடு வீடாகச் சென்று கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கும் வகையில், நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அப்பகுதியில் உள்ள அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காலை 9.00 மணி முதல், 11.00 மணி வரை பூனகரடு, காசக்காரனூர், அம்மாசி நகர், கிழக்கு தெரு, வாட்டர் போர்டு காலனி, பெரிய கொல்லப்பட்டி, உமா நகர், வைத்தித் தெரு, அல்லிக்குட்டை,கே.வி.எஸ்.பின்புறம், பாலாஜி நகர், சவுண்டம்மன் தெரு, புலி குத்தி 3வது தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடக்கிறது.

இன்று பிற்பகல் 12.00 முதல் 2.00 மணி வரை ரெட்டியூர் சிவாய நகர், அப்பாவு நகர், சிவதாபுரம், பள்ளப்பட்டி அல்ராஜ் தெரு, கே.எம்.எஸ்.கார்டன், பாரதி நகர்,பெரமனூர் கிழக்கு, செவ்வாய்ப்பேட்டை அப்புசெட்டி தெரு, தாண்டவன் நகர், வால்மீகி தெரு, நஞ்சம்பட்டி, அண்ணா மருத்துவ மனை பச்சப்பட்டி மெயின் ரோடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.

மேலும், நண்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை ஜாகீர் அம்மாப்பாளையம் முருகன் கோவில் தெரு, சோளம்பள்ளம், போடிநாயக்கன்பட்டி, நாராயணசாமிபுரம், பகுதிகள் என 48 இடங்களில் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!