கோவில் வழித்தடத்தை மீட்கக்கோரி மனுக்களை மாலையாக அணிந்து வந்து கலெக்டர் ஆபீசில் முறையீடு
கோவில் வழித்தடத்தை மீட்டுத்தரக் கோரி, சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனுக்களை மாலையாக அணிந்து வந்த மணிராஜ்.
சேலம் எருமாபாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஞான செல்வசக்தி முனியப்பன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் வழித்தடம், 425 சதுரடியை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி, மணிராஜ் என்பவர் மனுக்களை மாலையாக அணிந்து கொண்டு வந்து, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நூதன முறையில் மனு அளித்தார்.
இந்த கோவில் நிலத்தை மணி - இந்திராணி என்ற தம்பதியர்கள் ஆக்கிரமிப்பு செய்ததாகவும், அவர்களுக்கு ஆதரவாக பத்திர எழுத்தாளர் பத்திரபதிவு செய்து கொடுத்துள்ளதாகவும், மணிராஜ் குற்றம் சாட்டினார். இதுமட்டுமில்லாமல் ஆக்கிரமிப்பு நிலத்திற்கு வங்கி மேலாளர் கடன் வழங்கியுள்ளதாகவும் கூறினார்.
எனவே கோவில் நிலத்தை மற்றும் நிலத்தை ஆக்கிரமித்த தம்பதியினர் மற்றும் ஆக்கிரமிக்க உடந்தையாக செயல்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கோவில் வழித்தடத்தை மீட்டு ஊர் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று, அவர் தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu