சேலத்தில் மர்ம முறையில் கணவன் மரணம் : மனைவியிடம் காவல்துறை விசாரணை

சேலத்தில் மர்ம முறையில் கணவன் மரணம் :  மனைவியிடம் காவல்துறை விசாரணை
X

சேலத்தில் மர்மமான முறையில் கணவன் உயிரிழந்த நிலையில் மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலத்தில் மர்மமான முறையில் கணவன் உயிரிழந்த நிலையில் மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் அம்மாபேட்டை மார்க்கெட் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபு(39) வாழையிலை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ஷாலினி (22) இருவருக்கும் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இருவருக்கும் ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஷாலினி கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் ஆண் நண்பருடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதை கணவர் பலமுறை கண்டித்தும் கேட்காததால் மனைவிடம் இருந்த செல்போனை கணவர் பறித்துக் கொண்டுள்ளார். இருப்பினும் கணவருக்கு தெரியாமல் அடிக்கடி செல்போனை எடுத்து பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து தன்னிடம் இருந்த நகையை பறித்துக் கொண்டு கணவரை கொலை செய்துவிட்டு சென்று விட்டதாக கூறி மனைவி ஷாலினி கூச்சல் எழுப்பியுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது பிரபு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உறவினர்கள் நேரில் பார்த்தபோது, பிரபு மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், மனைவி ஷாலினி கொலை செய்து இருக்கலாம் எனவும் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். பின்னர் விரைந்து வந்த அம்மாபேட்டை காவல் துறையினர் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஷாலினியை காவல் நிலையம் அழைத்து சென்று இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவம் காவல் நிலையத்திற்கு பின்புறமே நடைபெற்றுள்ளதால் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்