சேலம் அருகே கள்ளக்காதல் தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை: ஒருவர் கைது

பைல் படம்
சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் பகுதியை சேர்ந்தவர் கிருபைராஜ் (23). தனியார் ஆலை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கலைமணி (23) என்ற திருமணமான பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
கலைமணியை சந்திக்கச் செல்லும் கிருபைராஜ், அவரது நண்பர் கலையரசனையும் உடன் அழைத்துச் செல்வாராம். அப்போது கலைமணியுடன் கலையரசனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. கலைமணியை திருமணம் செய்வது தொடர்பாக நண்பர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால், இருவரும் பேசாமல் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று, சேலம் குமரகிரி அருகே உள்ள மலைப் பகுதியில் கிருபைராஜும், கலைமணியும் வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த கலையரசன் இருவரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார். கலையரசன் தான் இரண்டு சக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து கிருபைராஜை குத்தி கழுத்தை அறுத்ததில் கிருபைராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருபைராஜின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து கொலை செய்த கலையரசனை, கிச்சிபாளையம்காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu