சேலத்தில் போலீஸ், பொதுமக்கள் இடையே நட்புறவு இறகுப் பந்து போட்டி

சேலத்தில் போலீஸ், பொதுமக்கள் இடையே நட்புறவு இறகுப் பந்து போட்டி
X

சேலத்தில் நடந்த போலீஸ், பொதுமக்கள் நட்புறவு இறகுப் பந்து போட்டி

சேலத்தில் பொதுமக்கள் வழக்கறிஞர், போலீசாரிடையே நட்புறவை ஏற்படுத்தும் வகையில் இறகுப் பந்து போட்டி நடைபெற்றது.

சேலம் சங்கர் நகரில் அமைந்துள்ள காஸ்மோபாலிட்டன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக பொதுமக்கள், வழக்கறிஞர் மற்றும் காவல்துறை இடையே நட்புறவை ஏற்படுத்தும் வகையில் இறகுப் பந்து போட்டி இன்று நடைபெற்றது.

குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையாளர் வேதரத்தினம் கலந்துகொண்டு இறகுப் பந்து போட்டியை துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இறகுப்பந்து போட்டியில் 20 குழுக்களைக் கொண்ட பிரிவினர், நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பைகள் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!