சேலம் மாநகராட்சியில் ஒரேநாளில் 7,492 பேருக்கு தடுப்பூசி: ஆணையாளர் தகவல்

சேலம் மாநகராட்சியில் ஒரேநாளில் 7,492 பேருக்கு தடுப்பூசி: ஆணையாளர் தகவல்
X
சேலம் மாநகராட்சியில் ஒரேநாளில் 7,492 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

சேலம் மாநகராட்சி பகுதிகளில், 8 நாட்களுக்கு பிறகு நேற்று தடுப்பூசி பணி தொடங்கியது. நேற்று மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற 33 கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் வாயிலாக, ஒரேநாளில் 7,492 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இதுவரை மொத்தம் 1 இலட்சத்து 86 ஆயிரத்து 462 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 42 ஆயிரத்து 564 நபர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளதாக ஆணையாளர் கிறிஸ்துராஜ் கூறியுள்ளார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி