சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
X

தீக்குளிக்க முயற்சித்த பெண் ஒருவரை மீட்ட காவல்துறையினர்.

முன்னாள் கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

சேலம் பட்டைக்கோயில் பகுதியைச் சேரந்த தில்ஷாத் என்பவர் தனது குழத்தைகளோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வனத்திருந்தார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்து மண்ணெண்னையை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனைக்கண்ட காவல்துறையினர் உடனடியாக தடுத்து அவரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சேலம் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வந்த அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சந்திரகாந்த் சீட்டு நடத்தி தனக்கு சேர வேண்டிய ரூபாய் இரண்டு லட்சத்து 50 ஆயிரத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும், கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து ஏழ்மை நிலையில் இருக்கும் தாங்கள் தங்களுக்கு சேர வேண்டிய தொகையை கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

செய்வதறியாத நிலையில் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள முயன்றதாகவும் காவல்துறையினரிடம் அவர் கூறினார்.

இதுதொடர்பாக சேலம் டவுன் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு