சிலிண்டர் டெலிவரி மேன்களை முன்கள பணியாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்.

சிலிண்டர் டெலிவரி மேன்களை  முன்கள பணியாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி  ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்.
X

தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிலிண்டர் டெலிவரிமேன்களை கொரோனா முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம்

பெருந்தொற்று காலத்திலும் பணியாற்றி வரும் சிலிண்டர் டெலிவரி மேன்களை முன்கள பணியாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி மேன் சங்கத்தினர் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரொனோ பெரும் தொற்று ஊரடங்கு காலத்திலும் சிலிண்டர் சப்ளை செய்பவர்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று சிலிண்டர்கள் விநியோகம் செய்து வருகின்றனர்.இந்த நிலையில் தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணை செயலாளர் பிரபு தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். பெருந்தொற்று காலத்திலும் தொடர்ந்து பணியாற்றி வரும் சிலிண்டர் டெலிவரி மேன்கள் சிலிண்டர் சப்ளை செய்யும் போது கொரோனோ தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக அரசு இதுவரை எங்களுக்கு எந்தவித நிவாரணத் தொகையும் வழங்கவில்லை எனவே மருத்துவர்கள் செவிலியர்கள் துப்புரவு பணியாளர்களை தொடர்ந்து எங்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். முறையான மாத ஊதியம் இஎஸ்ஐ ஈபிஎப் போன்ற சலுகைகள் வழங்க வேண்டும். குடும்பங்களுக்கு முன்னுரிமை அளித்து பாதுகாப்பு வழங்குவதோடு அச்சமின்றி பணிபுரியவும் தகுந்த ஆவண செய்திட வேண்டும். கொரோனா தொற்றால் உயிரிழக்கும் குடும்பத்தாருக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்தனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!