பாடலை மக்களிடம் கொண்டு செல்ல சைக்கிள் பேரணி

பாடலை மக்களிடம் கொண்டு செல்ல சைக்கிள் பேரணி
X

சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் சைக்கிள் பிரச்சார பயணம் மேற்கொண்டனர்.

ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தரப் போறாரு என்ற பாடலை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கான சைக்கிள் பிரச்சார பயணம் சேலம் மத்திய மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் நடைபெற்றது. இதில் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள செவ்வாய்பேட்டை, சீனிவாசா பார்க் பகுதியில் இருந்து திமுக மத்திய மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன், சைக்கிள் ஓட்டியபடி பேரணியை துவக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் சைக்கிள் ஓட்டிக் கொண்டு முன் செல்ல, திமுகவினர் 200 க்கும் மேற்பட்டோர் சைக்கிளில் திமுக கொடியை கட்டிக்கொண்டு பிரச்சார பயணத்தை மேற்கொண்டனர். சேலம் மாநகரில் செவ்வாய்பேட்டையில் துவங்கிய சைக்கிள் பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சின்னகடைவீதி, முதல் அக்ரஹாரம், பட்டை கோயில், அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி வழியாக சென்று கன்னங்குறிச்சி வரை சைக்கிள் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!