தவறாமல் தடுப்பூசி போட்டுக்கோங்க: உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்

தவறாமல் தடுப்பூசி போட்டுக்கோங்க: உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்
X

சேலத்தில், ஒன்றிணைவோம் வா திட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் 5 கிலோ அரிசி வழங்கினார்.

அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

திமுக சார்பில், 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி , சேலத்தில் நடைபெற்றது. சேலம் திமுக மத்திய மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு அழைப்பாளராக திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, இலவச அரிசி வழங்கும் பணியை தொடங்கிவைத்து, பயனாளிகளுக்கு அரிசி வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனோ காலத்தில் மக்களைச் சந்தித்து அவர்களுக்கு தேவையான அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கி வருகிறோம். வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் மக்களுடன் இருப்பது திமுக. தான்.

ஒன்றிணைவோம் வா திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்து,அதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. வீடுவீடாகச் சென்று பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது பொதுமக்கள் தடுப்பூசி போட ஆர்வத்துடன் வருகிறார்கள் பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் கொரோனாவை விரட்ட முடியும் என்றார்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil