சேலத்தில் 13.3% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: கலெக்டர் தகவல்

சேலத்தில் 13.3% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: கலெக்டர் தகவல்
X

சேலம் அழகாபுரத்தில் உள்ள மையத்தில் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் கார்மேகம் நேரில் ஆய்வு செய்தார்.

சேலத்தில் இதுவரை 13.3 சதவீத பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்கி உள்ளன. இதையடுத்து, பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். சேலம் அழகாபுரத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கலெக்டர், சேலத்திற்கு நேற்று மாலை 32,750 தடுப்பூசிகள் வந்ததையடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தடுப்பூசி போடும் பணிகள் துவங்கப்பட்டுள்ன. சேலத்திற்கு இதுவரை 6,01,180 தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் 5,61,316 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார்.

இன்று முதல், சேலம் மாநகராட்சி பகுதிகளில் 30 மையங்கள், ஊரகப்பகுதிகளில் 91மையங்கள் என மாவட்டம் முழுவதும் 121 மையங்கள் மூலம் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த கலெக்டர், இதுவரை 13.3 சதவீத பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil