பெட்ரோல் விலை உயர்வு - சேலத்தில் இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் விலை உயர்வு - சேலத்தில் இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டம்
X

பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து, இந்திய தொழிற்சங்க மையம் சார்பில், சேலம் மாவட்ட ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல் டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி, சேலத்தில் இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை புதிய உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. விலை உயர்வை கண்டித்து , பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி, சேலம் மாவட்ட ஊராட்சி அலுவலகம் முன்பு, இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், இன்று நடைபெற்றது.

மாநில அமைப்புக்குழு உறுப்பினர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கொரோனா கால நிவாரணமாக 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என போராட்டம் வாயிலாக அரசுக்கு வலியுறுத்தினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்