ஒரு கோடி மரக்கன்றுகள் இலக்கு: இளைஞர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

ஒரு கோடி மரக்கன்றுகள் இலக்கு: இளைஞர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
X

தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் விழிப்புணர்வை ஏற்படுத்த சேலத்திலிருந்து சென்னை வரை சைக்கிள் பயணத்தை தொடங்கிய இளைஞர்.

தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் விழிப்புணர்வை ஏற்படுத்த சேலத்திலிருந்து சென்னை வரை இளைஞர் ஒருவர் சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.

புவி வெப்பமயமாதலை தடுக்க மரக்கன்றுகளை நடுவதே தீர்வு என்பதை வலியுறுத்தி சேலத்திலிருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளார் சமூக செயற்பாட்டாளர் சத்தியமூர்த்தி. மக்கள் தாய் பூமி சுற்றுசூழல் மாசுக்கட்டுப்பாடு அறக்கட்டடளை நிர்வாகியான சத்தியமூர்த்தி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவுத்திட்டமான பசுமைப் புரட்சி திட்டத்தை மக்களிடையே கொண்டு சேர்க்கும் முயற்சியாக சேலத்திலிருந்து சென்னை வரை இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொள்கிறார்.

மக்கள் அனைவரும் வீட்டிற்கு ஐந்து மரக்கன்றுகளை நட்டு ஒரு கோடி மரக்கன்று சவாலை ஏற்க வருமாறு தனது பயணத்தின் மூலம் அழைப்பு விடுக்கிறார் சத்தியமூர்த்தி. சேலம் அரசுக்கலைக்கல்லூரி முன்பிருந்து தொடங்கிய இந்த சைக்கிள் பயணத்தை சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் நிறைவு செய்து, டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து மரக்கன்று வழங்க அவர் திட்டமிட்டுள்ளார்.

சேலம் சைக்கிள் கிளப்பை சேர்ந்தவர்கள் சத்தியமூர்த்தியை ஊக்குவிக்குவித்து வழியனுப்பும் விதமாக மாவட்ட எல்லை வரை சைக்கிள் பயணத்தில் பங்கேற்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!