திமுக வேட்பாளருக்கு ஆதரவு : திரண்டு வந்த இஸ்லாமிய பெண்கள்

திமுக வேட்பாளருக்கு ஆதரவு :  திரண்டு வந்த இஸ்லாமிய பெண்கள்
X
சேலம் வடக்கு தொகுதி திமுக வேட்பாளருக்கு இஸ்லாமிய பெண்கள் திரண்டு வந்து ஆதரவு தெரித்துள்ளனர்

திமுக வேட்பாளருக்கு திரண்டு வந்து இஸ்லாமிய பெண்கள் ஆதரவு கொடுத்தனர்.

சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

இதனடிப்படையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் சேலம் கோட்டை மற்றும் குகை பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்ட திமுக வேட்பாளர், திமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், மக்கள் நலப் பணிகளை பட்டியலிட்டு நோட்டீஸ் வழங்கினார்.

அப்போது இஸ்லாமிய பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து சட்டமன்ற வேட்பாளருக்கு வரவேற்பளித்தனர். கோட்டைப் பகுதியில் தாரை தப்பட்டை முழங்க பொம்மலாட்டம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சியுடன் நடைபெற்ற வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி, இஸ்லாமிய அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!