கஞ்சா பழக்கத்தால் அக்கா கணவர் சுத்தியலால் அடித்துக் கொலை

கஞ்சா பழக்கத்தால் அக்கா கணவர்  சுத்தியலால் அடித்துக் கொலை
X

கைது செய்யப்பட்ட பாலமுருகன்.

கஞ்சா பழக்கத்தை கைவிடாத கூறிய அக்கா கணவரை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த மைத்துனர் கைது.

சேலம் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கோகுல்நாத் (29). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் கோகுல்நாத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரியதர்சினி என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இளம் வயதிலேயே பிரியதர்சினியின் தம்பி, பாலமுருகன் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானது குடும்பத்தினரை பெரும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. பாலமுருகனின் செயலைக் கண்டித்து கஞ்சா போதை பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும் என்ற எண்ணத்தில் கோகுல்நாத் பலமுறை மைத்துனர் பாலமுருகனை கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், இன்று அதிகாலை 5 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த சகோதரியின் கணவர் கோகுல்நாத்தை சுத்தியலால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சகோதரியின் கணவர் என்று கூட பார்க்காமல் கஞ்சா போதைக்கு அடிமை ஆனதால் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. கஞ்சா போதையிலிருந்த பாலமுருகனை உடனடியாக அவரது குடும்பத்தினர் பிடித்து வீட்டில் அடைத்து வைத்து பூட்டினர். இதனையடுத்து குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பள்ளப்பட்டி காவல் துறையினர் பாலமுருகனை கைது செய்தனர்.

கோகுல்நாத்தின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாலமுருகனுக்கு கஞ்சா எப்படி கிடைத்தது? கஞ்சா விற்பனையில் தொடர்புடைய கும்பல் எது? என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா