சேலத்தில் 2000 கிலோ குட்கா பதுக்கி விற்பனை: 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில், கடந்த மாதம் 23 ஆம் தேதி காவல் ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் குட்கா கொண்டு சென்ற 17 வயது சிறுவன் சிக்கினான். அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மகுடஞ்சாவடியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 150 குட்கா மூட்டைகள் மற்றும் 50 பெட்டி பான்மசாலா என 2000 ஆயிரம் கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.
அண்டை மாநிலத்தில் இருந்து மொத்தமாக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வாங்கி வந்து, சேலம் மாநகரில் குறிப்பாக தொழிலாளர்கள் மற்றும் பள்ளி , கல்லூரி மாணவர்கள் அதிகம் நடமாடும் பகுதியில் சில்லறையாக பலருக்கு விற்பனை செய்ததன் மூலம் பொது சுகாதாரம் பாதிக்கும் வண்ணம் நடந்து கொண்டது தெரிய வந்தது.
இதையடுத்து , செவ்வாய்பேட்டையை சேர்ந்த பரத்சிங் (25) , ஓம்சிங் (28),தீப்சிங் (32 ) , மற்றும் மகுடஞ்சாவடியை சேர்ந்த மதன் (31) ஆகியோர் குண்டர் சட்டத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு நஜ்முல் ஹோதா உத்தரவின் பேரில் நால்வரையும் குண்டர் சட்டத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu