சேலம் மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசிப்பணி: கமிஷனர் நேரில் ஆய்வு
சேலம் பள்ளப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை மாநகராட்சி ஆணையாளர் கிறுஸ்துராஜ் பார்வையிட்டார்.
சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் வாயிலாக ஜூன் 12 ஆம் தேதி வரை 90,396 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 29,907 நபர்களுக்கு இரண்டாம் தவணை, தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை, மாநகராட்சி ஆணையாளர் கிறுஸ்துராஜ், இன்று ஆய்வு செய்து பார்வையிட்டார்.
பின்னர், மாநகராட்சி ஆணையாளர் கூறியதாவது: மாநகராட்சி பகுதி சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் தேர்தலில் பணியாற்றிய அலுவலர்கள் என 12,734 நபர்களுக்கு முதல் தவணை மற்றும் 5,284 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
60 வயதிற்கு மேற்பட்ட 23,882 நபர்களுக்கு முதல் தவணை மற்றும் 11,331 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 45 – 59 வயதிற்குட்பட்ட 30,215 நபர்களுக்கு முதல் தவணை மற்றும் 13,289 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
18 முதல் 44 வயது வரையிலான 23,527 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 3 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 38 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 16 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் ஒரு சிறப்பு முகாமிலும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu