சேலம் மாவட்டத்தில் சிறார் தடுப்பூசி முகாம் தொடங்கியது

சேலம் மாவட்டத்தில் சிறார் தடுப்பூசி முகாம் தொடங்கியது
X

சேலம் கோட்டை பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்.

சேலம் மாவட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கியது; முதல் நாளில், 21,500 மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

தமிழகத்தில் இன்றுமுதல், 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், ஜனவரி 10 ஆம் தேதி முதல் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகளுக்கே சென்று சிறுவர்களுக்கு நேரடியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, சேலத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சேலம் கோட்டை பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாநகராட்சி நகர்நல அலுவலர் யோகானந்த் தொடங்கி வைத்தார்.

சேலம் மற்றும் ஆத்தூர் சுகாதார மாவட்ட அளவில் மொத்தமாக ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 200 பேர் 15 வயது முதல் 18 வயதுக்குட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. முதல்நாளான இன்று 69 மையங்களில் 21,500 மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பள்ளிகளில் நடைபெறும் முகாம்களில் மாணவ மாணவியர் ஆர்வத்தோடு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.


Tags

Next Story
ai based agriculture in india