தங்கமணியின் மகன் வீட்டில் ரெய்டு: சேலத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

தங்கமணியின் மகன் வீட்டில் ரெய்டு: சேலத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
X

அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

சேலத்தில் தங்கமணியின் மகன் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்ததாக அவரது வீடு உள்பட 69 இடங்களில் இன்று அதிகாலை முதலே லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சேலத்தில் உள்ள தங்கமணியின் மகன் தரணிதரனின் வீட்டில் நடைபெற்று வரும் சோதனையை கண்டித்து அதிமுகவினர் திரளானோர் அப்பகுதியில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏ பாலசுப்பிரமணியம், முன்னாள் எம்எல்ஏக்கள் சக்திவேல், செல்வராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா