சேலத்தில் வயதானவர்களை தாக்கி பணம் பறிக்கும் கும்பல்: சிசிடிவி காட்சியால் பரபரப்பு

சேலத்தில் வயதானவர்களை தாக்கி பணம் பறிக்கும் கும்பல்: சிசிடிவி காட்சியால் பரபரப்பு
X

பணம் பறிக்கும் கும்பலின் சிசிடிவி காட்சி.

சேலத்தில் வயதானவர்களை தாக்கி பணம் பறிக்கும் கும்பலின் சிசிடிவி காட்சி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாநகர் தாதகாப்பட்டி பகுதியில் கடந்த சில வாரங்களாக தினம்தோறும் ஒரு கும்பல் அந்தப் பகுதியில் இருக்கும் முதியவர்களை தாக்கி பணம் பறிக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.

இது குறித்து காவல்துறையில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியில் ஒரு முதியவர் வீட்டின் முன்புறம் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு நபர்கள் அவரை அடித்து உதைத்தும், பின்னர் கல்லால் தாக்கியும் அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!