சேலத்தில் பிரபல ரவுடி வளத்திகுமார் மீது 8வது முறையாக குண்டாஸ்

சேலத்தில் பிரபல ரவுடி வளத்திகுமார் மீது  8வது முறையாக குண்டாஸ்
X

வளத்திகுமார். 

சேலத்தில் பிரபல ரவுடியான வளத்திகுமார் எட்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த குமார் என்கிற வளத்திகுமார். கடந்த 13 ஆம் தேதி அன்னதானபட்டி பகுதியில் பால்ராஜ் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததோடு, அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு சென்றுள்ளார்.

இதுகுறித்து பால்ராஜ் அளித்த புகாரின் பேரில், வளத்திகுமார் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே அன்னதானப்பட்டி மற்றும் கிச்சிப்பாளையம் காவல் நிலையங்களில் கடந்த 20 ஆண்டுகளில் வழிப்பறி, கொலை, ஆள் கடத்தல், அரிசி கடத்தல் என, 40க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் வகையில் வளத்திகுமார் செயல்பட்டு வந்ததால், தற்போது 8-வது முறையாக அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் ரவுடி செல்லதுரை கொலை வழக்கில் சாட்சிகளை மிரட்டியதாக கைது செய்யப்பட்ட கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த இளையராஜா என்பவரையும், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா