கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி தொழிலாளர்கள் சாலை மறியல்

கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி தொழிலாளர்கள் சாலை மறியல்
X

கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் 100 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

சேலத்தில் கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் 100 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து இன்றைய தினம் நாடு முழுவதும் கட்டுமான தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடத் தொழிலாளர்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

மேலும் கட்டுமானப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைத்து விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!