சேலத்தில் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

சேலத்தில் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
X

சேலத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

சேலத்தில் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகர் 26வது கோட்டம் சின்னேரிவயல்காடு பகத்சிங் தெருவில் வசிப்பவர்களுக்கு 45 நாட்களுக்கு மேல் குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோபமடைந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

போராட்டம் குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி உதவி ஆணையர் செல்வராஜ், உதவி பொறியாளர்கள் பாலசுப்பிரமணி, சீனிவாசன் ஆகியோர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடனடியாக குடிநீர் இணைப்பு கொடுப்பதாகவும், 15நாட்களில் கிடப்பில் உள்ள சாக்கடை மற்றும் சாலை அமைக்கும் பணியை முடித்து கொடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
ai future project