பால் கொள்முதல் விலையை உயர்த்த உற்பத்தியாளர் நலச்சங்கம் அரசுக்கு கோரிக்கை

பால் கொள்முதல் விலையை உயர்த்த உற்பத்தியாளர் நலச்சங்கம் அரசுக்கு கோரிக்கை
X

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர்.

பால் உற்பத்தியாளர்களின் நலன்கருதி கொள்முதல் விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் குறிப்பாக பசும்பால் கொள்முதல் விலையை ரூபாய் 32 லிருந்து 40 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்; எருமைப் பால் விலையை ரூபாய் நாற்பதில் இருந்து ஐம்பது ஆக உயர்த்தி வழங்க வேண்டும்; பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்த 4 மாதமாக நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்; பால் உற்பத்தியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிப்பதோடு நல வாரியத்தின் மூலமாக கிடைக்கும் சலுகைகளை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது. மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று முடிந்த பிறகு புதிய நிர்வாகிகள் முறைப்படி பதவி ஏற்பார்கள் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture