/* */

சேலத்தில் 48 குண்டுகள் முழங்க காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

சேலம் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்வு சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா தலைமையில் இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

சேலத்தில் 48 குண்டுகள் முழங்க காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு
X

வீரவணக்க ஸ்தூபிக்கு சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா மரியாதை செலுத்தினார்

சேலம் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்வு சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வீரவணக்க ஸ்தூபிக்கு சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா, சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் மகேஸ்வரி, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ், சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர்கள் மோகன்ராஜ், மாடசாமி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், காவலர்கள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து பணியின் போது வீர மரணம் அடைந்த காவலர்களின் பெயர்களை வாசித்து அவர்களை நினைவு கூர்ந்து 48 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரமரணமடைந்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

Updated On: 21 Oct 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  7. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  8. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  9. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  10. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்