பள்ளப்பட்டி மாரியம்மன் கோவில் மாசி மாத திருவிழாவில் பால்குட ஊர்வலம்

பள்ளப்பட்டி மாரியம்மன் கோவில் மாசி மாத திருவிழாவில் பால்குட ஊர்வலம்
X

பால்குட ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெண்கள்.

சேலத்தில் நடைபெற்ற பால்குடம் ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

சேலம் பள்ளப்பட்டி மாரியம்மன் கோவில் மாசி மாத திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. கடந்த 2ஆம் தேதி தொடங்கிய இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான பால்குட ஊர்வலம் இன்று நடைபெற்றது. இதில் பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பால்குடம் ஏந்தி பரவசத்தோடு வந்தனர். அரிசிபாளையம் லீ பஜார் சாலை வழியாக ஊர்வலமாக சென்று கோவில் வளாகத்தை அடைந்தனர். தொடர்ந்து மூலவருக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்