சேலத்தில் ஓடும் பேருந்திலேயே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி

சேலத்தில் ஓடும் பேருந்திலேயே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி
X

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காதல் ஜோடி.

ஓடும் பேருந்தில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ்(21), இவரது உறவினர் லோகேஸ்வரி(20) என்பவரை காதலித்து வந்துள்ளார். அவர்களது காதலருக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இருவரும் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி சென்னை சென்று, பின்னர் அங்கிருந்து வேலை தேடிக் கொண்டு பெங்களூருக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் இந்த காதல் ஜோடி நேற்று பெங்களூரில் இருந்து சேலத்திற்கு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தபோது, சேலம் அருகே வந்தபோது அவர்கள் பேருந்துலேயே மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். இதைப் பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்து, உடனே அவர்களை சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்ததாகவும், லோகேஸ்வரி வீட்டில் அதிகளவில் தொந்தரவு கொடுத்ததாலும் வீட்டை விட்டு வெளியேறி தற்போது விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காதல் ஜோடியின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கருப்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!