சேலத்தில் பூஜை செய்வதாக கூறி நூதன முறையில் நகை கொள்ளை: போலீசார் விசாரணை

சேலத்தில் பூஜை செய்வதாக கூறி நூதன முறையில் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
X

சேலத்தில் பூஜை செய்வதாகக் கூறி நூதனமுறையில் நகையை கொள்ளையடித்து சென்ற நபர்.

சேலத்தில் பூஜை செய்வதாகக் கூறி, நூதனமுறையில் நகையை கொள்ளையடித்து சென்ற நபர். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் பூஜை செய்வதாகக் கூறி, நூதனமுறையில் வீட்டிற்குள் புகை அதிகளவில் போட்டு நகையை கொள்ளையடித்து சென்ற நபர். பாய் வேடத்தில் வந்த திருடன் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் லைன்மேடு அருகே உள்ள வடக்குதெரு பகுதியை சேர்ந்த ஆயிஷா என்ற பெண்,தனது மகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் தாய்-மகள் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட பாய் வேடத்தில் வந்த நபர்,உங்கள் வீட்டில் பில்லி சூனியம் உள்ளது. இதனை கழித்துவிட சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் எனக்கூறி, தாய் மகளிடம் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி அந்த நபரிடம் பூஜை செய்ய வீட்டிற்குள் அனுமதித்து உள்ளனர். பூஜை செய்து கொண்டு இருந்தபோது மகள் அணிந்திருந்த இரண்டரை பவுன் நகையை கழற்றி அவர் வைத்திருந்த சொம்பில் போடும்படி தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணும் தான் அணிந்திருந்த நகையை கழற்றி சொம்பினுள் போட்டுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் பாய் வேடத்தில் இருந்த நபர் வீட்டில் புகை போட்டுள்ளார். அப்போது புகை மூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் அங்கிருந்து அந்த நகையுடன் தப்பி சென்றுள்ளார்.

பின்னர் தாய்,மகள் இருவரும் ஏமாற்றப்பட்டதை அறிந்து இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி காவல் துறையினர் இப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து நகையை திருடி சென்ற நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai future project