திமுகவினருக்கும், சுயேட்சை வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல்

திமுகவினருக்கும், சுயேட்சை வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல்
X

திமுகவினருக்கும், சுயேட்சை வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல்.

சேலத்தில் திமுகவினருக்கும் சுயேட்சை வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு.

சேலம் மாவட்டத்தில் 1514 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றிருந்தாலும் ஆங்காங்கே ஒருசில இடங்களில் முன்னணி கட்சியினர் சில இடையூறுகளை ஏற்படுத்தினர். குறிப்பாக எடப்பாடியில் திமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே நிகழ்ந்த தள்ளுமுள்ளுவினால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் சேலம் மாநகராட்சி மைய அலுவலகம் அருகே திமுகவினருக்கும், சுயேட்சை வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தபடி சேலம் மாவட்டத்தில் மாலை 5 மணியுடன் பொதுமக்கள் வாக்களிக்கும் கால அவகாசம் நிறைவு பெற்றது. அதன் பிறகு வந்த வாக்காளர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். அவ்வாறு கோட்டை மாநகராட்சியின் மைய அலுவலகம் அருகே உள்ள அரசு பள்ளியில் ஐந்து மணிக்கு மேல் வந்த வாக்காளர்களை போலீசார் திருப்பி அனுப்பியதை பார்த்த திமுகவினர் மற்றும் சுயேட்சை வேட்பாளரின் ஆதரவாளர்கள் போலீசாரிடம் வாக்காளர்களை உள்ளே அனுமதிக்கும்படி முறையிட்டனர்.

அப்போது திடீரென திமுகவினருக்கும், சுயேட்சை வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதையடுத்து அப்பகுதிக்கு வந்த சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் மாடசாமி தலைமையிலான அதிவிரைவு படையினர் மோதலில் ஈடுபட்டவர்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!