கார் பட்டறையில் தீ விபத்து: 2 கார், உதிரிபாகங்கள் எரிந்தது சேதம்

கந்தம்பட்டி பைபாஸ் அருகே கார் பழுது நீக்கும் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்து.
சேலம் கந்தம்பட்டி பைபாஸில் இருந்து சிவதாபுரம் செல்லும் சாலையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் கோபால் என்பவருக்கு சொந்தமான கார் பட்டறை உள்ளது. இங்கு பழைய கார்களுக்கு மெக்கானிக், எலக்ட்ரிக், டிங்கரிங், பெயிண்டிங் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இன்று அதிகாலை ஐந்து மணியளிவில், பட்டறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பட்டறையில் இருந்த உதிரிபாகங்கள் வெடித்து சிதறும் சப்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் சுமார் ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான உதிரிபாகங்கள் எரிந்து தீக்கரையானதோடு, இரண்டு கார்களும் சேதமடைந்தது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்து குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu